Saturday, 2 July 2011

காதற் செடி

அன்னையை கண்ட
பிள்ளைகள் போல..
என்னுடைய 
கவிதைகளுக்கான
உவமைகள் கூட
உன்னைத் தேடியே
ஓடிவருகின்றன

காதலின்
வலி அதிகமாவது
அது மறுக்கப்படும்போது அல்ல
புரிய வைக்க இயலாதபோது..!

எனக்காக நீ
என்பதல்ல காதல்;
உனக்காக நான்
என்பதே காதல்!

இருவருக்குமான
சுயமரியாதை
மதிக்கப்படும்வரை
காதற் செடி
ஜீவனுள்ளதாய் இருக்கும்.

1 comment:

  1. வணக்கம் அருமையான தகவல்களை வெளியிட்டுவரும்
    உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளும் ,வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் .நன்றி பகிர்வுக்கு......

    ReplyDelete