Wednesday 26 October 2011

ஆடம்பரம்...

கண்டேன்
கண்டறியாதன கண்டேன்!
ஒரு மனிதன் 
புவி காணாத
பொருள் நுகர்வில் திளைத்தலும்,
ஒரு மனிதன்
வறுமையில் உழல்தலும்,
கண்டேன்
கண்டறியாதன கண்டேன்!
நோய்க்குத்தான் மருந்து
முதுமைக்குதான் அரவணைப்பு
அசதிக்குதான் வசதியே தவிர
சொகுசு என்பது மனக் குருடனுக்குத்தான்.
வேடிக்கை கண்டீரோ?
உபயோகமான பொருட்களின் அதிகரிப்பில்
உபயோகமற்ற மனிதர் தோன்றினார்!
பணி என்பது என்னவாம்?
தாம் அறியாமல் செய்வதாம்.
எவ்வாறு எனில்
ஒரு பறவை தான் தின்ற
பழத்தின் விதை தூக்கித்
தூரச் சென்று தூவுதல் போலே
வாழ்வே பணியாகிப் போவதாம்!